முழுமையாக மறுவடிவமைக்கப்பட்ட Pixel கேமரா மூலம் ஒவ்வொரு தருணத்தையும் ரெக்கார்டு செய்யலாம். போர்ட்ரெய்ட், இரவு ஒளி, டைம் லாப்ஸ், சினிமேட்டிக் பிளர் ஆகிய அம்சங்களின் மூலம் அற்புதமான படங்களையும் வீடியோக்களையும் எடுக்கலாம்.
பிரமிக்க வைக்கும் படங்களை எடுக்கலாம்
• எக்ஸ்போஷர் மற்றும் வெண் சமநிலைக் கட்டுப்பாடுகளுடன் கூடிய HDR+ - இந்த HDR+ மூலம் குறைந்த ஒளியுள்ள அல்லது பின்னணியில் அதிகமான ஒளியுள்ள தருணங்களில் நேர்த்தியான படங்களை எடுக்கலாம்.
• இரவு ஒளி - இனி ஃபிளாஷைப் பயன்படுத்த வேண்டிய அவசியமே இருக்காது. இரவு ஒளி அம்சம் மூலம் இருளில் தெரியாமல் இருக்கக்கூடிய அனைத்து விவரங்களையும் வண்ணங்களையும் ரெக்கார்டு செய்யலாம். ஆஸ்ட்ரோஃபோட்டோகிராஃபியைப் பயன்படுத்தி பால்வெளி அண்டத்தையும் நீங்கள் படமெடுக்கலாம்!
• உயர் தெளிவுடன் பெரிதாக்குதல் - தொலைவில் இருப்பதைத் தெளிவாகப் படமெடுக்கலாம். நீங்கள் படங்களைப் பெரிதாக்கும்போது உயர் தெளிவுடன் பெரிதாக்குதல் அம்சத்தினால் அவற்றை நேர்த்தியானதாக்கும்.
• நீண்டநேர எக்ஸ்போஷர் - காட்சியில் நகரும் சப்ஜெக்ட்களைக் கலைநயத்துடன் மங்கலாக்கலாம்
• ஆக்ஷன் பேன் - சப்ஜெக்ட்களை ஃபோகஸ் செய்யும்போது பின்னணியை கலைநயத்துடன் மங்கலாக்கலாம்
• மேக்ரோ ஃபோகஸ் - சிறிய சப்ஜெக்ட்களிலும் அடர்த்தியான வண்ணம் மற்றும் குறிப்பிடத்தக்க மாறுபாடு
ஒவ்வொரு முறையும் அற்புதமான வீடியோக்களை எடுக்கலாம்
• நெரிசல், குறைந்த வெளிச்சம் உள்ள இடங்களில் கூட பிரமிக்க வைக்கும் தெளிவுத்திறன் மற்றும் தெளிவான ஆடியோவுடன் தடங்கல் இல்லாமல் வீடியோக்களை ரெக்கார்டு செய்யலாம்
• சினிமேட்டிக் பிளர் - உங்கள் சப்ஜெக்ட்டின் பின்புலத்தை மங்கலாக்கி சினிமா தரத்தில் வீடியோவை உருவாக்கலாம்
• சினிமா கேமரா - மொபைலின் நகரும் அசைவுகளைக் குறைக்கும்
• நீண்ட ஷாட் - இயல்புக் கேமரா பயன்முறையில் ஷட்டர் பட்டனை நீண்ட நேரம் அழுத்தி கேஷுவலான வீடியோக்களை விரைவாக எடுக்கலாம்
Pixel 8 Pro பிரத்தியேக அம்சங்கள்
• 50MP உயர் தெளிவுத்திறன் - நுணுக்கமான விவரங்களுடன் படங்களை உயர் தெளிவுத்திறனில் எடுக்கலாம்
• நிபுணர் அம்சங்கள் - ஃபோகஸ், ஷட்டர் வேகம் போன்ற பலவற்றை மாற்றக்கூடிய கட்டுப்பாடுகளுடன் கூடுதலாக அழகு சேர்க்கலாம்
தேவைகள் - Android 14 மற்றும் அதற்குப் பிந்தைய பதிப்புகளில் இயங்கும் Pixel சாதனங்களில் மட்டுமே Pixel கேமராவின் சமீபத்திய பதிப்பு இயங்கும். Pixel ஃபோன்களுடன் இணைக்கப்பட்ட Wear OS 3 (மற்றும் அதற்குப் பிந்தைய பதிப்பு) சாதனங்களில் மட்டுமே Wear OSஸுக்கான Pixel கேமராவின் சமீபத்திய பதிப்பு இயங்கும். சில அம்சங்கள் சில சாதனங்களில் இருக்காது.
புதுப்பிக்கப்பட்டது:
22 நவ., 2024