Google கிட்ஸ் ஸ்பேஸ் என்பது குழந்தைகள் கண்டறியவும் உருவாக்கவும் வளரவும் உதவும் உள்ளடக்கத்தைக் கொண்ட டேப்லெட் அனுபவம்.
Google கிட்ஸ் ஸ்பேஸை நிறுவுவதற்கு உங்கள் குழந்தைக்கென ஒரு Google கணக்கும் இணக்கமான சாதனமும் தேவை. பெற்றோர் கட்டுப்பாடுகளை இயக்க ஆதரிக்கப்படும் Android, Chromebook, அல்லது iOS சாதனத்தில் Family Link ஆப்ஸ் இருக்க வேண்டும். அம்சங்களின் கிடைக்கும் நிலை பிராந்தியத்திற்கு ஏற்ப மாறலாம். தேர்ந்தெடுக்கப்பட்ட Android டேப்லெட்களில் Google கிட்ஸ் ஸ்பேஸ் கிடைக்கும். Google கிட்ஸ் ஸ்பேஸில் Google Assistant கிடைக்காது.
குழந்தைகளுக்கே உரிய ஆர்வத்தை மனதில் கொண்டு’ வடிவமைக்கப்பட்டது
விலங்குகள், கலை ப்ராஜக்ட்டுகள் என எதுவாக இருந்தாலும் தாங்கள் விரும்பும் விஷயங்களில் குழந்தைகள் குட்டி வல்லுநர்களாகவே மாறிவிடுவார்கள். எனவேதான் குழந்தைகள் தேர்ந்தெடுக்கும் ஆர்வங்களின் அடிப்படையில் Google கிட்ஸ் ஸ்பேஸ் தரமான உள்ளடக்கத்தைப் பரிந்துரைக்கிறது. பரிந்துரைக்கப்பட்ட உள்ளடக்கத்தின் மூலம் குழந்தைகள் தங்களது சமீபத்திய விருப்பங்களைப் புதுமையான சுவாரஸ்யமான வழிகளில் கண்டறியலாம். குழந்தைகள் தங்களுக்கான கதாப்பாத்திரத்தை உருவாக்கி தங்கள் அனுபவத்தைப் பிரத்தியேகமாக்கலாம்
பரிந்துரைக்கப்பட்ட ஆப்ஸ், புத்தகங்கள், வீடியோக்கள்
Google கிட்ஸ் ஸ்பேஸைக் குழந்தைகள் திறக்கும்போது தரமான உள்ளடக்கத்தைக் கொண்ட ஒரு நூலகத்தையே பார்ப்பார்கள். விளையாடவும் கற்றுக்கொள்ளவும் புதிய வழிகளைத் தெரிந்துக்கொள்வதற்கான ஆப்ஸ், கேம்கள், புத்தகங்கள், வீடியோக்கள் ஆகியவற்றுக்கான பரிந்துரைகளைக் குழந்தைகள் பார்க்கலாம்.
புத்தகங்களும் வீடியோ உள்ளடக்கமும் அனைத்துப் பிராந்தியங்களிலும் கிடைக்காது. YouTube Kids ஆப்ஸ் கிடைப்பதைப் பொறுத்தே வீடியோ உள்ளடக்கம் கிடைக்கும். புத்தக உள்ளடக்கத்திற்கு Play புக்ஸ் ஆப்ஸ் தேவை. ஆப்ஸ், புத்தகங்கள், வீடியோ உள்ளடக்கம் ஆகியவற்றின் கிடைக்கும் நிலை அறிவிப்பின்றி மாறலாம்.
ஆசிரியர்களால் அங்கீகரிக்கப்பட்ட ஆப்ஸ் & கேம்கள்
ஆசிரியர்களாலும் குழந்தைகளுக்கான கல்வி மற்றும் மீடியா நிபுணர்களாலும் அங்கீகரிக்கப்பட்ட ஆப்ஸ் மற்றும் கேம்கள் Google Play மூலமாக Google கிட்ஸ் ஸ்பேஸில் கிடைக்கும். இந்த ஆப்ஸ் குழந்தைகளின் வயதிற்கு ஏற்றவை, அக்கறையுடன் வடிவமைக்கப்பட்டவை, வேடிக்கையும் ஊக்கமும் அளிப்பவை.
Google கிட்ஸ் ஸ்பேஸ் பரிந்துரைக்கும் உள்ளடக்கத்துக்கும் மேலாக விரும்பும் பெற்றோர்கள் Google Play ஸ்டோரிலிருந்து, பெற்றோர்களின் மெனுவின் மூலம் வேண்டிய உள்ளடக்கத்தைச் சேர்க்கலாம்.
குழந்தைகளுக்கான புத்தக வல்லுநர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட புத்தகங்கள்
ட்ரக்குகளிலிருந்து பேலே நடனம் வரை அனைத்தைப் பற்றியும் உள்ள அற்புதமான புத்தகங்கள் மூலம் வாசிக்கும் ஆர்வத்தை ஊக்குவியுங்கள்.
ஈர்க்கக்கூடிய உள்ளடக்கத்தைக் கொண்ட பரிந்துரைக்கப்பட்ட வீடியோக்கள்
YouTube Kidsஸில் உள்ள கிரியேட்டிவான வேடிக்கையான வீடியோக்களை Google கிட்ஸ் ஸ்பேஸ் பரிந்துரைக்கிறது. குழந்தைகள் கற்றுக்கொள்ள, பாட, சிரிக்க என எதை விரும்பும்போதும் அவர்களுக்குப் பிடித்தமான தலைப்புகள், கதாப்பாத்திரங்கள் பற்றிய வீடியோக்களைப் பார்க்கலாம்.
படைப்பாற்றலையும் விளையாட்டையும் ஊக்குவிக்கும் வீடியோக்கள்
எளிமையாக வரையும் செயல்பாடுகளிலிருந்து சின்னச் சின்ன அறிவியல் செயல்பாடுகள் வரை அனைத்தையும் YouTube Kidsஸில் பரிந்துரைக்கப்படும் வீடியோக்கள் மூலம் ’உருவாக்கு’ தாவலில் குழந்தைகள் உருவாக்கவும் கண்டறியவும் தங்கள் திறமைகளைப் பயிற்சி செய்யவும் ஊக்கம் பெறலாம்.
பெற்றோர் கட்டுப்பாடுகள் மூலம் எல்லைகளை அமைத்தல்
Googleளின் Family Link ஆப்ஸில் உள்ள பெற்றோர் கட்டுப்பாடுகள் மூலம் உங்கள் சாதனத்திலிருந்தே உள்ளடக்கத்தை நிர்வகித்தல், பயன்படுத்தும் நேரத்தை கட்டுப்படுத்தல் போன்ற பலவற்றைச் செய்து உங்கள் குழந்தையின் அனுபவத்தை வழிநடத்தலாம்.
புதுப்பிக்கப்பட்டது:
23 அக்., 2024