Google கீபோர்டை நீங்கள் விரும்புவதற்குக் காரணமான வேகம் & நம்பகத்தன்மை, விரலால் நகர்த்தி உள்ளிடுதல், குரல் மூலம் உள்ளிடுதல், கையெழுத்து போன்ற பல வசதிகள் Gboardல் உள்ளன
விரலால் நகர்த்தி உள்ளிடுதல் — உங்கள் விரலால் ஓர் எழுத்திலிருந்து இன்னொரு எழுத்துக்கு ஸ்லைடு செய்வதன் மூலம் வேகமாக உள்ளிடலாம்
குரல் மூலம் உள்ளிடுதல் — உரையைப் பேசி உள்ளிடலாம்
கையெழுத்து* — இணைவெழுத்துகள் மற்றும் அச்சிடப்பட்ட எழுத்துகள் வடிவில் எழுதலாம்
ஈமோஜி தேடல்* — ஈமோஜியை விரைவாகக் கண்டறியலாம்
GIFகள்* — சரியான உணர்வை வெளிப்படுத்தும் GIFகளைத் தேடிப் பகிரலாம்.
பன்மொழிகளில் உள்ளிடுதல் — தானாகவே மொழிகளுக்கு இடையில் மாறிக் கொள்ளும். நீங்கள் தேர்ந்தெடுத்துள்ள எந்த மொழியையும் Gboard தானாகவே திருத்தும், பரிந்துரையை வழங்கும்.
Google Translate — கீபோர்டில் உள்ளிடும்போதே மொழிபெயர்க்கலாம்
* Android Go சாதனங்களில் இது ஆதரிக்கப்படாது
நூற்றுக்கணக்கான மொழி வகைகள், அவை:
ஆஃப்ரிக்கான்ஸ், அம்ஹாரிக், அரபிக், அசாமீஸ், அஜர்பைஜானி, பவேரியன், பெங்காலி, போஜ்புரி, பர்மீஸ், செபுவானோ, சத்தீஸ்கரி, சீனம் (மாண்டரின், கான்டோனீஸ் மற்றும் பிற மொழிகள்), சிட்டகோனியன், செக், டெக்கான், டச்சு, ஆங்கிலம், ஃபிலிபினோ, ஃபிரெஞ்சு, ஜெர்மன், கிரேக்கம், குஜராத்தி, ஹௌஸா, இந்தி, இக்போ, இந்தோனேஷியன், இத்தாலியன், ஜாப்பனீஸ், ஜாவானீஸ், கன்னடம், கெமர், கொரியன், குர்திஷ், மகாஹி, மைதிலி, மலாய், மலையாளம், மராத்தி, நேபாளி, வடக்கு சோத்தோ, ஒடியா, பாஷ்டோ, பெர்சியன், போலிஷ், போர்ச்சுகீஸ், பஞ்சாபி, ரோமானியன், ரஷ்யன், சராய்கி, சிந்தி, சிங்களம், சோமாலி, தெற்கு சோத்தோ, ஸ்பானிஷ், சுண்டனீஸ், சுவாஹிலி, தமிழ், தெலுங்கு, தாய், ஸ்வானா, டர்கிஷ், உக்ரைனியன், உருது, உஸ்பெக், வியட்னாமீஸ், ஹோசா, யோருபா, ஜுலு மற்றும் பல மொழிகள்! ஆதரிக்கப்படும் அனைத்து மொழிகளின் பட்டியலையும் பார்க்க https://goo.gl/fMQ85U எனும் இணைப்பிற்குச் செல்லவும்
பயனுள்ள உதவிக்குறிப்புகள்:
• சைகை மூலம் கர்சரைக் கட்டுப்படுத்துதல்: ஸ்பேஸ் பாரின் மீது விரலால் ஸ்லைடு செய்து கர்சரை நகர்த்தலாம்
• சைகை மூலம் நீக்குதல்: 'நீக்கு' விசையிலிருந்து விரலால் இடதுபுறம் ஸ்லைடு செய்து விரைவாகப் பல சொற்களை நீக்கலாம்
• எண் வரிசையை எப்போதும் காட்டும்படி செய்தல் ('அமைப்புகள் → விருப்பத்தேர்வுகள் → எண் வரிசை' என்பதற்குச் சென்று இயக்கலாம்)
• குறிகள் தொடர்பான குறிப்புகள்: நீண்ட நேரம் அழுத்துவதன் மூலம் குறிகளை அணுகுவதற்கான விரைவுக் குறிப்புகள் உங்கள் விசைகளில் காட்டப்படும் ('அமைப்புகள் → விருப்பத்தேர்வுகள் → குறிகளைப் பெற நீண்ட நேரம் அழுத்துக' என்பதற்குச் சென்று இயக்கலாம்)
• ஒற்றைக் கைப் பயன்முறை: பெரிய திரை மொபைல்களில் திரையின் இடதுபுறத்திலோ வலதுபுறத்திலோ கீபோர்டைப் பின் செய்யலாம்
• தீம்கள்: விசை பார்டர்களுடனோ அவை இல்லாமலோ உங்களுக்கு விருப்பமான தீமினைத் தேர்வுசெய்யலாம்
புதுப்பிக்கப்பட்டது:
21 நவ., 2024