Google Lens மூலம் பார்ப்பவற்றைத் தேடலாம், பணிகளை விரைவாகச் செய்து முடிக்கலாம், உங்களைச் சுற்றி இருப்பவற்றைத் தெரிந்துகொள்ளலாம். இதற்கு கேமராவையோ படத்தையோ பயன்படுத்தினால் போதும்.
சொற்களை ஸ்கேன் செய்து, மொழிபெயர்த்திடுங்கள் நீங்கள் பார்க்கும் சொற்களை மொழிபெயர்க்கலாம், வணிக அட்டையை தொடர்புகளில் சேமிக்கலாம், போஸ்டரில் உள்ள நிகழ்வுகளை கேலெண்டரில் சேர்க்கலாம், நேரத்தைச் சேமிக்கும் வகையில் உங்கள் மொபைலில் கடினமான குறியீடுகளையோ நீளமான பத்திகளையோ நகலெடுத்து ஒட்டலாம்.
தாவரங்களையும் விலங்குகளையும் அடையாளங்காணுங்கள் உங்கள் நண்பரின் அபார்ட்மெண்ட்டில் உள்ள தாவரம் என்ன என்பதையோ பூங்காவில் எந்த வகையான நாயைப் பார்த்தீர்கள் என்பதையோ தெரிந்துகொள்ளலாம்.
சுற்றியுள்ள இடங்களை அறிந்துகொள்ளுங்கள் இட அடையாளங்கள், உணவகங்கள், முகப்புகள் ஆகியவற்றை அடையாளங்கண்டு, அவற்றைப் பற்றி அறிந்துகொள்ளலாம். ரேட்டிங்குகள், வணிக நேரம், வரலாற்று உண்மைகள் போன்ற பலவற்றைப் பார்க்கலாம்.
விரும்புபவற்றைக் கண்டறியுங்கள் உங்கள் கண்ணைப் பறிக்கும் ஆடையையோ உங்கள் ஹாலிற்கு ஏற்ற நாற்காலியையோ பார்க்கிறீர்களா? அதுபோன்ற ஆடைகள், ஃபர்னிச்சர், வீட்டு அலங்காரப் பொருட்கள் என நீங்கள் விரும்புவற்றைக் கண்டறியலாம்.
ஆர்டர் செய்ய வேண்டியதைத் தெரிந்துகொள்ளுங்கள் Google Maps மதிப்புரைகளின் அடிப்படையில் உணவக மெனுவில் உள்ள பிரபலமான உணவு வகைகளைத் தெரிந்துகொள்ளலாம்.
குறியீடுகளை ஸ்கேன் செய்யுங்கள் QR குறியீடுகளையும் பார்கோடுகளையும் விரைவாக ஸ்கேன் செய்யலாம்.
*சில மொழிகளிலோ பகுதிகளிலோ மட்டுமே கிடைக்கும். மேலும் விவரங்களைத் தெரிந்துகொள்ள
g.co/help/lensஸிற்குச் செல்லவும். சில ’Lens’ அம்சங்களைப் பயன்படுத்த இணைய இணைப்பு தேவை.