Live Transcribe & Sound Notifications என்பது காது கேளாதவர்கள் மற்றும் செவித்திறன் குறைபாடு உள்ளவர்கள் அன்றாட உரையாடல்களையும் சுற்றியுள்ள ஒலிகளையும் தங்கள் Android மொபைல் மூலம் எளிதாக அறிவதற்கான ஆப்ஸாகும்.
பெரும்பாலான சாதனங்களில் இந்தப் படிகளைப் பின்பற்றி நீங்கள் Live Transcribe & Sound Notifications ஆப்ஸைத் திறக்கலாம்:
1. சாதனத்தின் அமைப்புகள் ஆப்ஸைத் திறக்கவும்
2. மாற்றுத்திறன் வசதி என்பதைத் தட்டவும்
3. நீங்கள் பயன்படுத்த விரும்பும் அம்சத்தைப் பொறுத்து, Live Transcribe அல்லது ஒலி அறிவிப்புகள் என்பதைத் தட்டவும்
Live Transcribe அல்லது ஒலி அறிவிப்புகளைத் தொடங்க மாற்றுத்திறன் பட்டன், சைகை அல்லது விரைவு அமைப்புகளையும் பயன்படுத்தலாம் (
https://g.co/a11y/shortcutsFAQ).
நிகழ்நேர டிரான்ஸ்கிரிப்ஷன்கள்• 120க்கும் மேற்பட்ட மொழிகளிலும் பேச்சுவழக்குகளிலும் நிகழ்நேர டிரான்ஸ்கிரிப்ஷன்களைப் பெறலாம். பெயர்கள், வீட்டுப் பொருட்கள் போன்று அடிக்கடி நீங்கள் பயன்படுத்தும் பிரத்தியேக வார்த்தைகளைச் சேர்க்கலாம்.
• யாரேனும் உங்கள் பெயரைச் சொல்லும்போது உங்கள் மொபைல் அதிர்வுறுமாறு அமைக்கலாம்.
• உரையாடலில் பதில்களை டைப் செய்யலாம்.
• ஆடியோவைத் தெளிவாகப் பெற வயர் ஹெட்செட்கள், புளூடூத் ஹெட்செட்கள் ஆகியவற்றிலுள்ள் வெளிப்புற மைக்ரோஃபோன்களையும் USB மைக்குகளையும் பயன்படுத்தலாம்.
• மடக்கத்தக்க மொபைல்களில், வெளிப்புறத் திரையில் டிரான்ஸ்கிரிப்ஷன்களையும் டைப் செய்யப்பட்ட பதில்களையும் காட்டலாம். இதன்மூலம் பிறருடன் எளிதாகத் தகவல்பரிமாற்றம் செய்யலாம்.
• டிரான்ஸ்கிரிப்ஷன்களை 3 நாட்கள் வரை சேமித்து வைத்துக்கொள்ளலாம். சேமித்த டிரான்ஸ்கிரிப்ஷன்கள் உங்கள் சாதனத்தில் 3 நாட்களுக்கு இருக்கும். இதனால் நீங்கள் அவற்றை நகலெடுத்து வேறு இடத்தில் ஒட்டிக்கொள்ளலாம். இயல்பாக, டிரான்ஸ்கிரிப்ஷன்கள் சேமிக்கப்படுவதில்லை.
ஒலி அறிவிப்புகள்• உங்களைச் சுற்றி கேட்கும் முக்கிய ஒலிகள் குறித்த அறிவிப்பைப் பெறலாம் (எ.கா. ஸ்மோக் அலாரம் ஒலிப்பது, குழந்தை அழுவது)
• உங்கள் வீட்டு உபயோகச் சாதனங்கள் ஒலி எழுப்பும்போது அறிவிப்பைப் பெறுவதற்குப் பிரத்தியேக ஒலிகளைச் சேர்க்கலாம்.
• உங்களைச் சுற்றி என்ன நடந்தது என்பதைத் தெரிந்துகொள்ள கடந்த 12 மணிநேரத்தில் பெறப்பட்ட ஒலி அறிவிப்புகளை மீண்டும் கேட்கலாம்.
தேவைகள்:• Android 12 மற்றும் அதற்குப் பிந்தைய பதிப்புகள்
காது கேளாதவர்கள், செவித்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கெனப் பிரத்தியேகமாக உள்ள அமெரிக்காவின் காலாடெட் பல்கலைக்கழகத்துடன் இணைந்து Live Transcribe & Sound Notifications ஆப்ஸ் உருவாக்கப்பட்டது.
உதவி & கருத்து• கருத்தை வழங்குவதற்கும் தயாரிப்பு குறித்த அறிவிப்புகளைப் பெறுவதற்கும்
https://g.co/a11y/forum எனும் பக்கத்தில் உள்ள 'மாற்றுத்திறன் வசதி' எனும் Google குழுவில் சேருங்கள்
• Live Transcribe & Sound Notifications ஆப்ஸைப் பயன்படுத்துவதில் உதவி தேவைப்பட்டால்
https://g.co/disabilitysupport எனும் பக்கத்தில் எங்களைத் தொடர்புகொள்ளுங்கள்
அனுமதிகளுக்கான அறிவிப்புமைக்ரோஃபோன்: உங்களைச் சுற்றி கேட்கும் பேச்சையும் ஒலிகளையும் எழுத்தாக்கம் செய்ய Live Transcribe ஆப்ஸுக்கும் ஒலி அறிவிப்புகள் அம்சத்திற்கும் மைக்ரோஃபோன் அணுகல் தேவை. டிரான்ஸ்கிரிப்ஷன்களோ கண்டறியப்பட்ட ஒலிகளோ செயலாக்கப்பட்ட பிறகு ஆடியோ சேமிக்கப்படுவதில்லை.
அறிவிப்புகள்: ஒலிகள் குறித்து உங்களுக்குத் தெரிவிக்க 'ஒலி அறிவிப்புகள்' அம்சங்களுக்கு அறிவிப்புகளுக்கான அணுகல் தேவை.
அருகிலுள்ள சாதனங்கள்: உங்கள் புளூடூத் மைக்ரோஃபோன்களுடன் இணைக்க Live Transcribe ஆப்ஸுக்கு அருகிலுள்ள சாதனங்களுக்கான அணுகல் தேவை.