Microsoft To Do, உங்கள் அன்றாடப் பணிகளைத் திட்டமிடுவதை எளிதாக்கும் ஓர் எளிமையான மற்றும் புத்திசாலித்தனமான செய்யவேண்டியவை பட்டியலாகும். பணி, பள்ளி அல்லது வீடு எனத் தேவை எதுவாக இருந்தாலும், உங்கள் உற்பத்தித்திறனை அதிகரித்து, உங்கள் மனஅழுத்த நிலைகளைக் குறைக்க To Do உதவும். எளிமையான தினசரி பணிப்பாய்வை நீங்கள் உருவாக்கும் வகையிலான அறிவார்ந்த தொழில்நுட்பம் மற்றும் அழகான வடிவமைப்பை இது கொண்டுள்ளது.
உங்கள் நாளை ஒழுங்கமைத்துத் திட்டமிடலாம்
To Do வழங்கும் ஸ்மார்ட் பரிந்துரைகள் மூலம் உங்கள் நாளை ஒழுங்கமைத்து, தினமும் நீங்கள் முடிக்க வேண்டிய மிகவும் முக்கியமான பணிகள், சேகரிப்புகள் அல்லது வழக்கமான செயல்களைச் செய்து முடியுங்கள். உங்கள் தொலைபேசி மற்றும் கணினிக்கு இடையே To Do ஒத்திசைவதால், உங்கள் செய்யவேண்டியவையைப் பள்ளி, அலுவலகம் அல்லது மளிகைக் கடை அல்லது உலகின் எங்கு பயணம் செய்தாலும் அங்கிருந்தும் கூட அணுகலாம்.
குடும்பம் மற்றும் நண்பர்களுடன் உங்கள் பட்டியல்களைப் பகிரலாம்
பொதுவான பட்டியல்கள் மற்றும் பணிகளில் கூட்டுப் பணியாற்றுவதையும், உங்கள் இலக்குகளை தடையின்றி அடைவதையும் பட்டியல் பகிர்வு அம்சம் வழங்குகிறது. பணிகளின் பட்டியலை உங்கள் குழுவினருடன் பகிர அல்லது மளிகை ஷாப்பிங் பட்டியலை உங்கள் வாழ்க்கைக்துணையுடன் பகிர விரும்பும் போது, எங்கள் பகிர்வு இணைப்பு மூலம் சிறிய குழுக்கள் மற்றும் நேருக்கு நேர் பகிர்ந்து, இணைந்து பணியாற்றுவதை எளிதாக்கியுள்ளோம். ஒன்றாக இணைந்து எளிதாகப் பணிகளை முடிக்கலாம்!
உங்கள் பணியை சிறியதாகவும், செயல்படக்கூடிய உருப்படிகளாகவும் பிரிக்கலாம்
படிகள் (துணைப்பணிகள்) அம்சம் மூலம் எந்தவொரு செய்யவேண்டியவையையும் சிறியதாகவும், செயல்படக்கூடிய உருப்படிகளாகவும் பிரிக்கலாம். வாடிக்கையாளர்களின் உற்பத்தித்திறனை அதிகரிக்க உதவுவதற்காக, ஒவ்வொரு செய்யவேண்டியவை பட்டியலிலும் எத்தனைப் படிகள் (துணைப்பணிகள்) உள்ளன என்றும், இதுவரை அவற்றில் எத்தனை முடிக்கப்பட்டுள்ளன என்றும் காட்டப்படும். செய்யவேண்டியவை முடிக்கப்பட்டதாக அல்லது முடிக்கப்படாததாகக் குறிக்கப்பட்டிருந்தாலும் கூட, படிகள் (துணைப்பணிகள்) அம்சம் அவற்றின் நிறைவு நிலையைப் பராமரிக்கும்.
கெடு தேதிகள் மற்றும் நினைவூட்டல்களை அமைக்கலாம்
எங்கிருந்தும் உங்கள் செய்யவேண்டியவையை விரைவாகச் சேர்க்கலாம், ஒழுங்கமைக்கலாம் மற்றும் திட்டமிடலாம். நீங்கள் கொஞ்சமும் மறக்கக்கூடாத முக்கியமான செய்யவேண்டியவையுடன், நினைவூட்டல்களையும் கெடு தேதிகளையும் நீங்கள் சேர்க்கலாம்—அவற்றை உங்களுக்காக நாங்கள் நினைவில் வைத்துக்கொள்வோம். மேலும், நீங்கள் தினந்தோறும், வாரந்தோறும் அல்லது வருடாந்திர அடிப்படையில் தேர்வுக்குறியிட வேண்டியுள்ள செய்யவேண்டியவை உங்களிடம் இருந்தால், ஒவ்வொரு முறையும் உங்களுக்கு நினைவூட்டும் வகையில் கெடு தேதிகளை நீங்கள் அமைத்துக் கொள்ளலாம்.
உங்கள் பணிகளில் குறிப்புகளைச் சேர்க்கலாம்
முகவரிகள் முதல் நீங்கள் படிக்க விரும்புகிற புத்தகம் பற்றிய விவரங்கள், உங்களுக்கு விருப்பமான கஃபேவிற்கான இணையதளம் வரை என ஒவ்வொரு செய்யவேண்டியவையிலும் விரிவான குறிப்புகளைச் சேர்த்து, To Do-ஐக் குறிப்பெடுக்கும் பயன்பாடாகவும் உபயோகிக்கலாம். நீங்கள் மேலும் சாதிப்பதற்கு உதவ, உங்கள் பணிகள் மற்றும் குறிப்புகள் அனைத்தையும் ஒரே இடத்தில் சேகரிக்கலாம்.
Outlook ஒருங்கிணைப்பு
Outlook அஞ்சலுடன் இணைந்து, உங்கள் Outlook திரைப்பலகப் பயனகம் அல்லது Outlook.com-இல் அதே Microsoft கணக்கைப் பயன்படுத்தி உங்கள் பணிகளைப் பார்க்கலாம். செய்யவேண்டியவை அனைத்தும் Exchange Online சேவையகங்களில் சேமிக்கப்படுவதால், அவற்றில் Microsoft To Do மற்றும் Outlook பணிகள் இரண்டும் தானாகவே காட்டப்படும்.
ஒவ்வொரு காலையிலும் நீங்கள் கவனம் செலுத்த விரும்புவதைத் திட்டமிட்டு, அந்த நாளுக்கான சக்திமிக்க உற்பத்தித்திறன் ஊக்கத்தை உங்களுக்குக் கொடுத்திடுங்கள். இந்த எளிமையான செய்யவேண்டியவை பயன்பாடு, பதிவிறக்கி பயன்படுத்துவதற்கு இலவசமானது. தனிப்பயனாக்கத்தக்க தீம்கள், குறிப்புகள், நினைவூட்டல்கள், கெடு தேதிகள், ஸ்மார்ட் பரிந்துரைகள் மற்றும் பல்வேறு சாதனங்களில் ஒத்திசைத்தல் ஆகியவை இதில் உள்ளடங்குகின்றன. சுருக்கமாகச் சொன்னால், உங்கள் வாழ்க்கையை நிர்வகித்து, கூடுதலாகச் செயல்பட உங்களுக்குத் தேவையான அனைத்தும். உங்கள் சேகரிப்புகள் அல்லது வழக்கமான செயல்களைச் செய்வது இதற்கு முன் இந்தளவு சுலபமாக இருந்ததேயில்லை. இது உங்கள் அன்றாட செயல்தளத்தில் நீங்கள் சேர்க்க வேண்டியுள்ள பணி நிர்வாகக் கருவி.
Microsoft To Do-ஐ நிறுவுவதன் மூலம், இந்தப் பயன்பாட்டு விதிமுறைகளை ஏற்றுக்கொள்கிறீர்கள்: https://go.microsoft.com/fwlink/?linkid=842577
புதுப்பிக்கப்பட்டது:
29 அக்., 2024