Gmail, Microsoft Outlook, Yahoo ஆகிய மெயில் பாக்ஸ்கள் உட்பட பல கணக்குகளை ஒழுங்கமைக்கும் Android-க்கான சிறந்த இலேசான மின்னஞ்சல் பயன்பாடான புதிய Yahoo Mail Go பயன்பாட்டைப் பயன்படுத்திப் பார்த்தமைக்கு நன்றி. உங்களுக்காகவே குப்பை இல்லாத அஞ்சல்பெட்டி, கூடுதல் தனிப்பயனாக்கம், இணைப்புகளின் காட்சிகள் அல்லது 1000GB மின்னஞ்சல் சேமிப்பிடம் போன்றவற்றை அளித்துள்ளோம். உங்கள் Yahoo, Gmail, Microsoft Outlook ஆகிய மெயில் பாக்ஸ்களை உங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளYahoo Mail Go பயன்பாடு உள்ளது.
விருப்பமான அம்சங்கள்:
எந்த மின்னஞ்சல் முகவரியையும் பயன்படுத்தலாம்
உங்கள் பிற கணக்குகளுக்குப் பொறாமையை ஏற்படுத்தாமல், Outlook அல்லது Gmail கணக்கைச் சேர்த்து எல்லாவற்றையும் ஒரே இடத்தில் சேர்க்கலாம். தனிப்பயன் அமைப்புகளும், வண்ணங்களும், அறிவிப்புகளும் உங்கள் மின்னஞ்சல் கணக்குகளை தனித்தனியாக வைக்கும் அனுபவத்தை அளிக்கிறது. எனவே, நீங்கள் பணிக்காக Outlook-ஐயும் வீட்டிற்கு Yahoo-ஐயும் மற்றும் அனைத்திற்கும் Gmail-ஐயும் பயன்படுத்துகிறீர்கள் என்றால், எங்கள் மின்னஞ்சல் பயன்பாடு அவை அனைத்தையும் சரியான இடத்தில் வைத்திருப்பதை எளிதாக்குகிறது.
குழுவிலகலாம்
உங்கள் இன்பாக்ஸில் நீங்கள் பார்க்க விரும்பாத ஸ்பேம் மற்றும் தேவையற்ற அஞ்சலில் இருந்து குழுவிலகிக் கொள்ளுங்கள். உங்கள் மின்னஞ்சல் முகவரி குழுசேர்ந்துள்ள அனைத்து அஞ்சல் பட்டியல்களையும் Yahoo மெயில் ஒரே திரையில் காண்பித்து, பிடிக்காதவற்றில் இருந்து ஒரே தட்டில் விலக எளிதாக்குகிறது.
இணைப்புகள் பார்வை
ஒருவரிடமிருந்து பெற்ற ஆவணத்தைத் தேடுகிறீர்களா? அல்லது, மூன்று ஞாயிற்றுக்கிழமைகளுக்கு முன்பு மதிய உணவு சாப்பிட்டடபோது எடுத்த புகைப்படத்தையா? பயப்பட வேண்டாம், இங்கேதான் உள்ளது. உங்கள் எல்லாப் புகைப்படங்களையும் கோப்பு இணைப்புகளையும் எளிதாக ஒரே காட்சியில் பாருங்கள். அதோடு பல இணைப்புகள் மற்றும் கோப்பு வகைகளை ஒரே நேரத்தில் அனுப்பலாம்.
தனிப்பயனாக்கம்
உங்கள் இன்பாக்ஸ்தான் உங்கள் அதிர்வு. நீங்கள் அதிக அக்கறை காட்டும் கோப்புறைகள் மற்றும் காட்சிகளுடன் கீழே உள்ள வழிசெலுத்தல் பட்டியையும் தனிப்பயனாக்குங்கள். பின்னர், உங்கள் சொந்த ரசனைக்கு ஏற்ப தனிப்பயன்மிக்க ஒலிகள், தீம்கள் மற்றும் ஸ்வைப்புகளைத் தேர்ந்தெடுத்து, சலிப்பில்லா இன்பாக்ஸை உருவாக்குங்கள்.
ஒலிகள் + அறிவிப்புகள்
பல வகை மின்னஞ்சல் அறிவிப்புகள், தனிப்பயன் ஒலி விழிப்பூட்டல்கள் மற்றும் காட்சிசார் அமைப்புகளிலிருந்து உங்களுக்கு தேவையானதைத் தேர்வு செய்யுங்கள். இதனால் அவசியமான நினைவூட்டல்களை மட்டுமே பெறுவீர்கள். மற்றவற்றைத் தவிர்த்திடலாம்.
அணுகல்தன்மை
உயர் மாறுபட்ட கருப்பொருள்கள், டைனமிக் உரை மறுஅளவிடுதலை அளிப்பதோடு, TalkBack ஸ்கிரீன் ரீடருடன் பயன்படுத்த உகந்ததாக உள்ளது. மேலும், உதவக்கூடிய தொழில்நுட்பத்தை இன்பாக்ஸின் அடிப்பகுதியில் உள்ள கோப்புறைகள் அனுமதிப்பதால் பயனர்கள் எளிதில் மின்னஞ்சலை சென்றடையலாம்.
1000 GB சேமிப்பிடம்
சுற்றித்திரிய இடமில்லாமல் முழு உலகையும் பார்க்க முடியாது. மின்னஞ்சல் நிர்வகிக்கும் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள், உங்கள் மெயிலை பெறுவதற்கு உங்கள் மெமரியை நீக்க வேண்டியிருக்காது.
● அழைப்பாளர் ID - உங்களை அழைப்பவர் யாரென்று தெரியவில்லையா? உள்வரும் அழைப்பாளர்களின் அஞ்சல் தொடர்புகளை Yahoo மெயில் தானாகவே காட்டும்.
● விரைவாகத் தேடலாம் - உங்கள் செய்திகள், தொடர்புகள், கோப்புகள், புகைப்படங்கள் ஆகிய அனைத்திலும் முன்பை விட அதிவேகமாகத் தேடுங்கள்.
● புதியதாகப் பெறலாம் - Paperless Post வழங்கும் உயிரூட்டப்பட்ட புகைப்படங்களுடனும், கலைஞரால் வடிவமைக்கப்பட்ட எழுதுபொருட்களுடனும் உங்கள் மின்னஞ்சல்களைத் தனித்து நிற்கச் செய்யுங்கள்.
● கடவுச்சொற்களே தேவையில்லை- பாதுகாப்பான, கடவுச்சொல் இல்லாத உள்நுழைவுக்கான கணக்கு விசையை இயக்குங்கள்.
● Google Drive மற்றும் Dropbox-ஐ இணைக்கலாம் - நீங்கள் கிளவுடில் சேமித்துள்ள புகைப்படங்களையும் ஆவணங்களையும் எளிதாக அணுகி அனுப்பலாம்.
சேவை விதிமுறைகள்:
https://policies.yahoo.com/us/en/yahoo/terms/product-atos/comms-mailadfree/index.htm மற்றும் தனியுரிமைக் கொள்கை https://policies.yahoo.com/us/en/yahoo/privacy/products/mail/index.htm
புதுப்பிக்கப்பட்டது:
15 நவ., 2024