Signal என்பது தனியுரிமையுடன் கூடிய மெசேஜிங் செயலியாகும். இது இலவசம் மற்றும் பயன்படுத்த எளிதானது, வலுவான எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷனுடன் உங்கள் தகவல்தொடர்புகளை முற்றிலும் தனிப்பட்டதாக வைத்திருக்கும்.
• உரை, குரல் மெசேஜ்கள், புகைப்படங்கள், வீடியோக்கள், GIFகள் மற்றும் கோப்புகளை இலவசமாக அனுப்பலாம். Signal உங்கள் மொபைலின் தரவு இணைப்பைப் பயன்படுத்துகிறது, எனவே நீங்கள் SMS மற்றும் MMS கட்டணங்களைத் தவிர்க்கலாம்.
• தெளிவான மறையாக்கம் செய்யப்பட்ட குரல் மற்றும் வீடியோ அழைப்புகள் மூலம் உங்கள் நண்பர்களை அழைக்கலாம். 40 பேர் வரை குழு அழைப்புகள் ஆதரிக்கப்படும்.
• 1,000 பேர் வரை கொண்ட குழு சாட்களில் இணையலாம். நிர்வாக அனுமதி அமைப்புகளுடன் குழு உறுப்பினர்களை யார் இடுகையிடலாம் மற்றும் நிர்வகிக்கலாம் என்பதைக் கட்டுப்படுத்தவும்.
• 24 மணிநேரத்திற்குப் பிறகு மறைந்துவிடும் படம், உரை மற்றும் வீடியோ ஸ்டோரீஸைப் பகிரலாம். ஒவ்வொரு ஸ்டோரிஸையும் யாரெல்லாம் பார்க்கலாம் என்பதைச் சரியாகக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க தனியுரிமை அமைப்புகள் உங்களுக்கு உதவும்.
• Signal உங்கள் தனியுரிமைக்காக உருவாக்கப்பட்டுள்ளது. உங்களைப் பற்றியோ, யாரிடம் பேசுகிறீர்கள் என்றோ எங்களுக்கு எதுவும் தெரியாது. எங்களின் ஓப்பன் சோர்ஸ் Signal புரோட்டோகாலின்படி எங்களால் உங்கள் மெசேஜ்களை வாசிக்கவோ உங்கள் அழைப்புகளைக் கேட்கவோ முடியாது. வேறு யாராலும் முடியாது. பின் கதவுகள் இல்லை, தரவு சேகரிப்பு இல்லை, சமரசம் இல்லை.
• Signal தற்சார்பானது மற்றும் லாப நோக்கற்றது; வித்தியாசமான நிறுவனத்தில் இருந்து ஒரு வித்தியாசமான தொழில்நுட்பம். 501c3 இலாப நோக்கற்ற அமைப்பாக நாங்கள் உங்கள் நன்கொடைகளால் ஆதரிக்கப்படுகிறோம், விளம்பரதாரர்கள் அல்லது முதலீட்டாளர்களால் அல்ல.
• உதவி, கேள்விகள் அல்லது கூடுதல் தகவலுக்கு https://support.signal.org/ பக்கத்தைப் பார்வையிடவும்
எங்கள் மூலக் குறியீட்டைப் பார்க்க, https://github.com/signalapp செல்லவும்.
Twitter @signalapp மற்றும் Instagram @signal_app இல் எங்களைப் பின்தொடரவும்
புதுப்பிக்கப்பட்டது:
21 நவ., 2024